தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது


தூத்துக்குடியில்  கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மச்சாது நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்த 3 பேர் போலீசை பார்த்ததும் தப்பி ஓடினர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story