தூத்துக்குடியில் 7½ மணி நேரம் தண்ணீரில் மிதந்து சிறுவன் சாதனை
தூத்துக்குடியில் 7½ மணி நேரம் தண்ணீரில் மிதந்து சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியை சேர்ந்த 9 வயது சிறுவன் ஹர்சன். இவர் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வந்தாராம். இவர் நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீச்சலில் நீண்ட நேரம் மிதந்து சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தாராம். இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இவர் நேற்று காலை 10 மணிக்கு நீச்சல் குளத்தில் மிதக்க தொடங்கினார். அவர் தொடர்ந்து மாலை 5.30 மணி வரை தண்ணீரில் மிதந்தார். இதன் மூலம் அவர் 7½ மணி நேரம் தொடர்ச்சியாக மிதந்து குளோபல் உலக சாதனையை படைத்தார். இந்த சிறுவனை பாராட்டி தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பரிசுகளை வழங்கினார்.
Related Tags :
Next Story