தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு


தூத்துக்குடியில்  இளம்பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த இரண்டு வாலிபர்கள் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

இளம்பெண்

தூத்துக்குடி ஸ்டேட்வங்கி காலனி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் எடிசன். இவருடைய மகள் ரோஷினி (வயது 25). இவர் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ரோஷினியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். ரோஷினி கழுத்தில் கிடந்த ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள 12 கிராம் தங்கசங்கிலியை பறித்தார்களாம். இதனால் ரோஷினி சத்தம் போட்டு உள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்ற மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 பேரையும் மடக்கி பிடித்து மத்தியபாகம் போலீசில் ஒப்படைத்தனர்.

கைது

தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் தாளமுத்துநகர் மேலஅலங்காரத்தட்டை சேர்ந்த சசிகுமார் மகன் கிஷோர்குமார் (22), உலகநாதன் மகன் உதயபிரகாஷ் (27) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் நகையை பறிமுதல் செய்தனர்.


Next Story