தூத்துக்குடியில்கரி தயாரிக்கும் குழியில் விழுந்தவர் சாவு
தூத்துக்குடியில் கரி தயாரிக்கும் குழியில் விழுந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
தூத்துக்குடி
நேபாளத்தை சேர்ந்தவர் லால்பகதூர் குப்தா (வயது 47). இவர்தூத்துக்குடியில் தங்கி இருந்து, தூத்துக்குடி அருகே கீழஅரசடி பகுதியில் உள்ள சிரட்டை கரி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாராம். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, சிரட்டை கரி குழியில் கிடந்த சிரட்டை கரியை அள்ளுவதற்கு முயற்சி செய்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குழிக்குள் தவறி விழுந்து விட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த லால்பகதூர் குப்தாவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story