தூத்துக்குடியில் மளிகை கடையில் திருட முயன்ற வாலிபர் கைது
தூத்துக்குடியில் மளிகை கடையில் திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் மகாலிங்கம் (வயது 42). இவர் தனது வீடு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றாராம். நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது, யாரோ மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார், அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, தூத்துக்குடி கணேசபுரத்தை சேர்ந்த முருகவேல் மகன் விஷ்ணு (22) என்பவர் மளிகை கடையை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெங்கைநாதபாண்டியன் வழக்கு பதிவு செய்து, விஷ்ணுவை கைது செய்தார். இவர் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.