தூத்துக்குடியில்போலீஸ் ஏட்டு வீட்டில் 20 பவுன் நகை மாயம்


தூத்துக்குடியில்போலீஸ் ஏட்டு வீட்டில் 20 பவுன் நகை மாயம்
x

தூத்துக்குடியில் போலீஸ் ஏட்டு வீட்டில் 20 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலீஸ் ஏட்டு வீட்டில் 20 பவுன் நகைகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போலீஸ் ஏட்டு

தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 47). இவர் தூத்துக்குடி பேரூரணியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவி வேல்தாய். இவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு சொந்தமான 20 பவுன் நகைகளை கழற்றி வீட்டில் பீரோவில் வைத்து இருந்தாராம்.

கடந்த 30-ந் தேதி ஒரு விழாவுக்கு செல்வதற்காக பீரோவில் வைத்து இருந்த நகையை பார்த்தார். அப்போது அங்கு இருந்த ரூ.5 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 20 பவுன் நகையையும் காணவில்லை.

விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்தாய் வீடு முழுவதும் தேடிப்பார்த்து உள்ளார். ஆனால் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்தாய் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிவு செய்தார். நகைகள் மாயமானது எப்படி? யாராவது திருடிச்சென்றார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story