தூத்துக்குடியில்வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்
தூத்துக்குடியில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3-சென்ட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தனராஜ். இவருடைய மகன் முகேஷ் (வயது 21). இவர் கடந்த 21.4.2023 அன்று சக்திநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தூத்துக்குடி கோட்ஸ் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கபில்தேவ் (23) என்பவரது நண்பரின் மோட்டார் சைக்கிளை எதிர்பாராத விதமாக முகேஷ் இடித்து விட்டாராம். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து கபில்தேவ், அவரது நண்பர் செல்சினி காலனிைய சேர்ந்த சாரோன் ராஜ்குமார் ஆகியோர் சேர்ந்து முகேசை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கபில்தேவ், சாரோன்ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கபில்தேவ் மீது 4 வழக்குகளும், சாரோன் ராஜ் குமார் மீது 2 வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.