தூத்துக்குடியில்பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா


தூத்துக்குடியில்பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் டி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் டி.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெ.ராமர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

போராட்டத்தில், 15 சதவீத ஓய்வூதியம் உயர்வை கடந்த 2017-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டும், தொலை தொடர்பு துறை நிர்வாகத்தின் அதிகாரம் அகற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story