தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வலியுறுத்தியும், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்டத் திருத்தத்தை கைவிடக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 36 பெண்கள் உள்பட 64 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story