தூத்துக்குடியில்ஒப்பந்த செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்ஒப்பந்த செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஒப்பந்த செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நீக்கத்தை ரத்து செய்யக்கோரியும், காலி பணியிடங்களில் பணி அமர்த்தக் கோரியும் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கொரோனா காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த செவிலியர்கள் 2 ஆயிரத்து 400 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதனை கண்டித்தும், தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் தங்களை பணியமர்த்த கோரியும் ஒப்பந்த செவிலியர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஒப்பந்த செவிலியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொருளாளர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டத் தலைவர் எஸ்.பி.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கை

ஒப்பந்த செவிலியர் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தை சேர்ந்த லெட்சுமி, வெங்கடேசுவரி, ஜெனிபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story