தூத்துக்குடியில்அ.தி.மு.க.வினருக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகம்


தூத்துக்குடியில்அ.தி.மு.க.வினருக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகம்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினருக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகத்தை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி, சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்து கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் அ.தி.மு.க.அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, முன்னாள் அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி மத்திய தெற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பும், தெற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் முத்தையாபுரம் பல்க் சந்திப்பிலும் அமைக்கப்பட்டு இருந்த கோடை கால தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், பழவகைகளை வழங்கினார்.


Next Story