தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய சம்பள உயர்வு வழங்கவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 28-ந் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. இந்த பேரணி குறித்த விளக்க கூட்டம் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் நடந்த பேரணி விளக்க கூட்டத்துக்கு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் மரியதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பஸ்களில் புறப்பட்டு சென்று பேரணியில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு அலெக்சாண்டர், தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் சேர்மன்ராஜ், டாக்டர் அம்பேத்கார் யூனியன் சண்முகசுந்தரம், என்.எல்.ஓ மாதவன், மின்சார தொழிலாளர் சம்மேளனம் ஜோதிமணி, பொறியாளர் சங்கம் ரெமிங்டன் வி.ராயர், அண்ணா தொழிற்சங்கம் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story