தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


தினத்தந்தி 7 Sept 2022 4:29 PM IST (Updated: 7 Sept 2022 4:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு புதன்கிழமை வருகைதந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு புதன்கிழமை வருகைதந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

முதல்-அமைச்சர் வருகை

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு காலை 10.35 மணிக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் வந்தனர். விமானநிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் புத்தகம், சால்வை வழங்கி வரவேற்றனர்

மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு

இதனை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அங்கு இருந்த தி.மு.க. நிர்வாகிகளை அருகில் சென்று சந்தித்தார். அவர்கள் பூங்கொத்து, சால்வை உள்ளிட்டவைகளை வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.

அதே போன்று வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியுடன் திரண்டு இருந்தனர். அவர்கள் முதல்-அமைச்சரை வரவேற்று கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் க.சந்திரசேகர், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.ஜோயல், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயசீலன், எஸ்.ஆர்.ஜெயதுரை, விஜிலா சத்தியானந்த், மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், நெல்லை மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி, தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம் உள்பட திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் முதல்-அமைச்சர் கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர். முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், தென்மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


Next Story