தூத்துக்குடியில்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் வேளாண்மை விரோத நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இதற்கு தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்தில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கடம்பாகுளம் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் உத்திரம் தமிழக விவசாயிகள் சங்கம் சரவணமுத்துவேல், களஞ்சியம், பெண் விவசாயிகள் சங்கம் அருள்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராகவன், பொருளாளர் நம்பிராஜன், மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கணபதி, நடராஜன், சங்கரன், செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன், மாநில குழு உறுப்பினர் ஞானசேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையா, மாநில குழு உறுப்பினர் லெனின் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.