தூத்துக்குடியில்விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் விவசாய சங்கத்தினர் புதன்கிழமை காலையில் நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டத்தை திரும்பபெற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி சிதம்பரம் நகர் அருகே விவசாயிகள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் புவிராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்டு) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) பாலமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நீர் நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நீர் நிலை ஒருங்கிணைப்பு சட்டம் 2023 முழுமையாக திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு எந்தவித ஆய்வு மேற்கொள்ளாமல் ரேஷன் கடைகளிலும், ஊட்டச்சத்து மையங்களிலும் அவசரகதியில் செறிவூட்டபட்ட அரிசி வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆ்ர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ஆர்.ராகவன், மாவட்ட பொருளாளர் நம்பி ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்டு) மாவட்டத் தலைவர் ராமையா, மாவட்ட பொருளாளர் லெனின் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.