தூத்துக்குடியில் மீனவர் தூக்கு போட்டு சாவு
தூத்துக்குடியில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தாய்நகர் சுனாமி காலனியை சேர்ந்தவர் மூக்காண்டி (வயது 40). மீனவர். இவர் குடிபோதையில் படகில் மீன்பிடிக்க சென்று வந்துள்ளார். இதனால் மூக்காண்டியை படகு உரிமையாளர் மீன்பிடிக்க அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மூக்காண்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story