தூத்துக்குடியில்சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில், முழுநேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று மாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜெயபாக்கியம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தே.முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.செல்லத்துரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் மு.தமிழரசன் கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்து சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியும், தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சத்துணவு ஊழியர்களின் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், ஊழியர்கள் அனைவரும் கையில் மெழுகுவரத்தி ஏந்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் எஸ்.வேல்முருகன் நன்றி கூறினார்.


Next Story