தூத்துக்குடியில் டிரைவர் கொலையில் நண்பர் கைது
தூத்துக்குடியில் டிரைவர் கொலையில் நண்பர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் டிரைவரை கொலை செய்த, நண்பர் கைது செய்யப்பட்டார்.
டிரைவர்
தூத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்த சக்திவேல். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 45). டிரைவர். இவர் அன்னை இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் இறந்த ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ராஜேசின் நண்பர் செந்தில்நாதன் (37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
அப்போது, கொலை செய்யப்பட்ட ராஜேஷ், அன்னை இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் செந்தில்நாதன் (37) என்வரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று மது குடித்து உள்ளார். கடந்த 16-ந் தேதி இரவு மது குடித்துக் கொண்டு இருந்த போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்நாதன் உருட்டுகட்டையால் ராஜேசை தாக்கி உள்ளார். பின்னர் அவரை வீட்டுக்கு வெளியில் தள்ளி விட்டு விட்டு சென்று விட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் இறந்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் செந்தில்நாதனை கைது செய்தனர்.