தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 2 மோட்டார்சைக்கிளில் வைத்து கஞ்சா விற்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜூடி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடி திரவியபுரம் சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனை

விசாரணையில், அவர்கள், தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகானந்த் மகன் ஹரிஷ் (வயது 23), சேகர் மகன் வசந்த் (23), தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த பரமசிவன் மகன் சத்திய பிரகாஷ்ராஜ் (21) என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

உடனடியாக தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கு பரிவு போலீசார் கஞ்சா விற்பனை செய்த ஹரிஷ், வசந்த் மற்றும் சத்திய பிரகாஷ்ராஜ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 850 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள், ரூ.2,100 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அந்த 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story