தூத்துக்குடியில் இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பத்துக்கு உதவி


தூத்துக்குடியில்  இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பத்துக்கு உதவி
x

தூத்துக்குடியில் இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பத்துக்கு உதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் 1988-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்தார். இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு கடந்த மாதம் இறந்தார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் 1988-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்த அனைவரும் நிதி திரட்டி உள்ளனர். அவ்வாறு திரட்டிய ரூ.1 லட்சம் நிதியை தூத்துக்குடியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பாட்ஷா, ராஜேந்திரன், முத்துராமலிங்கம், முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இறந்த வெங்கட்ராமனின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.


Next Story