தூத்துக்குடியில்ஆள்மாறாட்டம் செய்து நிலம் மோசடி:2 பேர் கைது


தூத்துக்குடியில்ஆள்மாறாட்டம் செய்து நிலம் மோசடி:2 பேர் கைது
x

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து நிலம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து நிலம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நிலம் மோசடி

தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவருடைய மகன் தர்மராஜ் (வயது 58). இவருக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் மீளவிட்டான் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் 8-வது தெருவை சேர்ந்த கருப்பையா மகன் வானமாமலை (65) மற்றும் தாளமுத்துநகர் மாதா நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கிறிஸ்துராஜ் (61) ஆகிய 2 பேரும் சேர்ந்து தர்மராஜின் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலி ஆவணம் தயாரித்து உள்ளனர். அதன்படி தர்மராஜ் என்பவரது 10 சென்ட் நிலத்தில் கூட்டுபட்டாவில் உள்ள அந்தோணிராஜ் என்பவரின் பெயரை பயன்படுத்தி கிறிஸ்துராஜ் போலியாக வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து, அதனை உண்மையான ஆவணம் போன்று ஆள்மாறாட்டம் செய்து 10 செண்ட் நிலத்தை வானமாமலைக்கு கிரையபத்திரம் பதிவு செய்து கொடுத்து உள்ளார்.

கைது

இது குறித்து அறிந்த தர்மராஜ், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், சரவணசங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் நிலத்தை மோசடி செய்ததாக கிறிஸ்துராஜ், வானமாமலை ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story