தூத்துக்குடியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்   எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

அகில இந்திய அளவில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ராஜசாமுவேல் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தாமரை கண்ணன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும், பாலிசி கடன் வட்டி விகிதத்தை குறைத்து தர வேண்டும், முகவர்களுக்கு தொடர் கமிஷன் உயர்த்தி கொடுக்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு தொகையை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், முகவர்களின் முதல் கமிஷனை குறைக்க கூடாது, ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி, 30-ந் தேதி முகவர் ஓய்வு தினம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திரளான முகவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story