தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஆதிபராசக்திநகரை சேர்ந்த சிதம்பரம் மகன் வசீகரன் (வயது 42). இவர் கடந்த 21.9.2023 அன்று தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த போது, யாரோ மர்ம நபர் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த விசுவநாதன் மகன் சுரேஷ்குமார் (40) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story