தூத்துக்குடியில்புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்


தூத்துக்குடியில்புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தூத்துக்குடி நகர்ப்புற வட்டார வளமையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்துக்கான தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் தூத்துக்குடி ஜின்பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளயில் நடந்தது. கூட்டத்துக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜெசுராஜன் செல்வக்குமார் தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தொடக்க நிலை) முத்து ஸ்ரீவரமங்கை முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் பால்சாமி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான பணிகள் குறித்து விளக்கி கூறினார்.

கூட்ட முடிவில் கற்போருக்கான பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பார்வதி தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் அனிதா, மேடையாண்டி ஆகியோர் செய்து இருந்தனர்


Next Story