தூத்துக்குடியில்தமிழ் வீட்டு முறை உணவகம் திறப்பு விழா
தூத்துக்குடியில் தமிழ் வீட்டு முறை உணவகம் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி டூவிபுரம் 4-வது தெருவில் தமிழ் வீட்டுமுறை உணவகம் இயற்கை எழிலோடு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. விழாவுக்கு ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி மா.துரை தலைமை தாங்கி உணவகத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிசாமி தொடங்கி வைத்தார். விழாவில் ஷாஜித் வரவேற்று பேசினார். விழாவுக்கு வந்தவர்களை திருவள்ளுவர், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் அணிந்த சிறுவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த உணவகத்தில் தமிழ் பாரம்பரிய வீட்டு முறையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்படுகிறது. உயர்தர சைவம், அசைவ உணவுகள் உள்ளன. மதியம் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு வகைகள், இரவில் இட்லி, இடியாப்பம் தோசை, ஆப்பம் புரோட்டா ஆட்டுக்கால் பாயா ஆகிய உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரிலும் குறித்த நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று உணவக உரிமையாளர் பானு தெரிவித்து உள்ளார்.
விழாவில் இந்திய இறகுபந்து பயிற்சியாளர் மாறன், தொழில் அதிபர்கள் ராஜேஷ், சார்லஸ், நயினார், சுரேஷ் ராஜா, ரேவதி, பொன்மணி, ஏ.எம்.ரகுமான், செல்லப்பாண்டியன், சுந்தரமகாராஜன், செந்தில், லியாகத் அலி, பார்த்திபன், ஜெபராஜ், அற்புதராஜ், முருகன், ஷாஜி, டொமினிக் ராஜா, நந்ததா, சுப்புராஜ், பாசில்அகமது, ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆறுமுகநயினார், வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன், கோல்டு லைன் சங்க நிர்வாகிகள் முத்துராஜ், அஸ்கர் அலி, அல்லாபகஸ், வீராசாமி, பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் சந்தணபாண்டி நன்றி கூறினார்.