தூத்துக்குடியில்புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கூட்டுத் திருப்பலி
தூத்துக்குடியில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கூட்டுத் திருப்பலி நடந்தது.
தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர் செல்வம் தலைமையில், அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானம், பங்குதந்தை அன்றனி புருனோ, திரேஸ்புரம் பங்கு தந்தை ஆனந்த், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி நடந்தன. நேற்று முன்தினம் திருவிழா மாலை ஆராதனை தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ஜான்பென்சன் தலைமையில் நடந்தது. நற்செய்தி நடுவம் இயக்குனர் ஸ்டார்வின் மறையுரை நிகழ்த்தினார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று புனித லூர்து அன்னையின் திருவிழா கூட்டு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் மறைமாவட்ட முன்னாள் செல்வராஜ், பிஷப் இல்லம் ஜோசப் இசித்தோர், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர், பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ ஆகியோர் திருவிழாத் திருப்பலியை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை விருந்து நடந்தது. விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.