தூத்துக்குடியில்பனை விதை சேகரிப்பு பணி தீவிரம்
தூத்துக்குடியில் பனை விதை சேகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14 கடற்கரை மாவட்டங்களில் வருகிற 24-ந் தேதி ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 லட்சம் பனை விதைகள் நடப்பட உள்ளன. இதனை தொடர்ந்து பனை விதைகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சேகரிக்கப்பட்ட 3 ஆயிரம் பனை விதைகளை சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி, கட்சி தலைவரும், பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணனிடம் வழங்கினார்.
அப்போது, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.