தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடியில் மர்ம நபர் புகுந்ததால், கனிமொழி எம்.பி வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி. இவரது வீடு தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் ஒருவர் அவரது வீட்டு பகுதியில் நடமாடி உள்ளார். அவர் திடீரென எம்.பி.யின் வீட்டு வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதை கவனித்த அங்கு இருந்தவர்கள் அந்த மர்நபரை பிடித்து சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story