தூத்துக்குடியில்வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தூத்துக்குடியில்வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில், "வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0" என்ற பெயரில் தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட உதவி ஆணையர் ஷாஜி வழிகாட்டுதலின்படி சோரீஸ்புரத்தில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடந்தது.

இந்தநிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வருங்கால வைப்புநிதி சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கமும், வருங்கால வைப்புநிதி நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.

இதில் தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திட்ட அலுவலர் சப்ரினா, மேற்பார்வையாளர் சசிகுமார் மற்றும் பாலமுருகன், ராஜசேகரன், சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story