தூத்துக்குடியில் சிறுமியை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் சிறுமியை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் சிறுமியை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமி
தூத்துக்குடி பூப்பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் மந்தையா குரூஸ். இவருடைய மகன் ஜேம்ஸ் (வயது 42). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 10 வயது சிறுமியை பலமுறை கற்பழித்து உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாயாருக்கு தெரிய வந்தது.
இதுதொடர்பாக அந்த சிறுமியின் தாயார், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்சை கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட ஜேம்சுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துலட்சுமி ஆஜரானார்.