தூத்துக்குடியில்தனியார் நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கிங்ஸ்லின் (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் சென்ற போது, அவரை வழிமறித்த மர்மநபர்கள் சிலர் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். உடனடியாக அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது, சிலர் கிங்ஸ்லினை மடக்கி பிடித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயம் அடைந்த கிங்ஸ்லின் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story