தூத்துக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் அதிரடி கைது
தூத்துக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தலைமை ஆசிரியர்
தூத்துக்குடி ராஜீவ்நகர் வடக்கு 2-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 56). இவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், 10 வயதான ஒரு பள்ளி மாணவிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.
இது குறித்து அந்த மாணவி தனது தாயிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போக்சோவில் கைது
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை நேற்று கைது செய்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.