தூத்துக்குடியில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா
தூத்துக்குடியில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில், சோனியாகாந்தி பிறந்தநாள் விழா மற்றும் இமாசலபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஐ.என்.டி.யூ.சி மாநில பொது செயலாளர் கே.பெருமாள்சாமி தலைமை தாங்கி பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோன்று, ஏரலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்காக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன் தலைமை தாங்கினார்.
மேலும், கோவில்பட்டி காந்தி மண்டபம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர். காமராஜர் தலைமையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர்கள் திருப்பதி ராஜா, முத்து, மாவட்ட செயலாளர்கள் துரைராஜ், ராஜசேகர், ஜோஸ்வா ஞானசிங் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.