தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
மத்திய அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தடுப்பது, மக்கள் மன்றத்தில் போராட்டம் நடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை போலீஸ் மூலம் பேச விடாமல் தடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை கண்டித்தும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினர். அவர்கள் கட்சி அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் காங்கிரசார் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story