தூத்துக்குடியில்போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்


தூத்துக்குடியில்போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர்வியாஸ் நகர் பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு அலங்கார மின்விளக்கு கோபுரம் அமைக்கவும், இன்னிசை கச்சேரி வைக்கவும் போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தலைமையில் தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story