தூத்துக்குடியில்மீனவ பெண்களுக்கு மீன்வலை வடிவமைத்தல் பயிற்சி


தூத்துக்குடியில்மீனவ பெண்களுக்கு மீன்வலை வடிவமைத்தல் பயிற்சி
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மீனவ பெண்களுக்கு மீன்வலை வடிவமைத்தல் பயிற்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் 'மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னுதல் மற்றும் வலைசீர் செய்தல் பற்றிய ஒருவார கால பயிற்சி நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 30 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மீனவளக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் தலைமை தாங்கினார். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் நீதிச்செல்வன் வரவேற்று பேசினார். மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி உதவி இயக்குனர் ஜே. ஏஞ்சல் விஜய நிர்மலா பேசினார். இந்திய தொழில் முனைவோர் வளர்ச்சி பணிகள் உதவி இயக்குனர் ஜெரினாபபி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, மீனவப் பெண்களுக்கான செவுள் வலைவடிவமைத்தல், பின்னல் மற்றும் சீர்செய்தல் பயிற்சியானது எதிர்காலத்தில் தங்களுக்கு ஒரு வருமானம் ஈட்டக்கூடியத் தொழிலாக மாறவேண்டும், அதற்கு இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர் நல நிலையம், மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் உதவிபொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரகாகர், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் சே.அர்ச்சனா, ஜே. அமல சஜீவா, த.சுந்தரேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் ச.மாரியப்பன் நன்றி கூறினார்.


Next Story