தூத்துக்குடியில்வ.உ.சி. கல்வியியல் கல்லூரி நாள் விழா


தூத்துக்குடியில்வ.உ.சி. கல்வியியல் கல்லூரி நாள் விழா
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வ.உ.சி. கல்வியியல் கல்லூரி நாள் விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி நாள் விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் கனகராஜ் தலைமை தாங்கினார். வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளாகிய நீங்கள் வருங்காலங்களில் ஆசிரியர்களாக சமுதாயத்தில் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். அதனால் இப்போதே நீங்கள் நன்கு கல்வி பயின்று உங்களது இலக்கை சிறப்பானதாக மாற்றிக் கொண்டு அதற்காக இப்போதே உழைக்க வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது தற்கொலை மட்டும் அல்ல. அந்த பிரச்சினைகளை கண்டு பயப்படாமல் அதற்கான தீர்வுகளை மன தைரியத்தோடு அணுக வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்வில் நல்ல நிலையை அடைய முடியும் என்று கூறினார்.

விழாவில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், இணை பேராசிரியர் ரசூல் முகைதீன் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story