தூத்துக்குடியில்வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா:உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை


தூத்துக்குடியில்வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா:உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழாவில், அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ.சி உருவப்படத்துக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

யூனியன் அலுவலகம்

புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி ஹெலன் பொன்மணி வசந்தா ஆகியோர் தலைமையில் யூனியன் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பொறியாளர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்

ஆத்தூர் மெயின் ரோட்டில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அவரது படத்திற்கு ஆத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கமால்தின், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், நகர பஞ்சாயத்து உறுப்பினர் கேசவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று, ஆத்தூர் சைவ வேளாளர் அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் சங்கம் முன்பு வ.உ.சிதம்பரனாரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது உருவப்படத்திற்கு சங்க தலைவர் ஆண்டியப்பன் என்ற கண்ணன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் தலைவர் வி.ஏ.வி.அண்ணாமலை சுப்பிரமணியம் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சங்க தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஏரல்

ஏரல் சைவ வேளாளர் சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏரல் காந்தி சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்த தலைவர் நங்கமுத்து தலைமை தாங்கினார். பொருளாளர் வீரபாகு பிள்ளை, செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குலசேகரன்பட்டினம்

குலசேகரன்பட்டினம் சைவ வேளாளர் சங்கம் சார்பில் வ.உ.சி. உருவப்படத்திற்கு சங்கத் தலைவர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பொருளாளர் தர்மலிங்கம், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் இல்லங்குடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story