தூத்துக்குடியில் மனைவிக்கு கத்திக்குத்து: கட்டிட தொழிலாளி கைது


தூத்துக்குடியில்  மனைவிக்கு கத்திக்குத்து:  கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மனைவியை கத்தியால் குத்திய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சந்தை ரோட்டை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அந்தோணிராஜ் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மாதவி (21). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாதவி, அண்ணாநகரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அந்தோணிராஜ், மனைவியை பார்க்க அங்கு சென்று உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மாதவியை குத்திவிட்டு ஓடிவிட்டாராம். இதில் காயம் அடைந்த மாதவி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து, அந்தோணிராஜை கைது செய்தார்.


Next Story