தூத்துக்குடியில்பெண்கள் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


தூத்துக்குடியில்பெண்கள் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பெண்கள் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் சதுரங்க போட்டி நடந்தது. போட்டிகள் 9 வயதுக்கு உட்பட்டோா், 11 வயதுக்கு உட்பட்டோா், 13 வயதுக்கு உட்பட்டோா், கல்லூரி பிரிவு மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளாக நடந்தது. போட்டிகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் நாகலட்சுமி, மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் நந்தகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி துணை முதல்வர் சூரியக்கலா தலைமை தாங்கினார். மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் வக்கீல் பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருநங்கை வக்கீல் விஜி கலந்து கொண்டு 50 பேருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜாய்சலின் சர்மிளா, மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story