தூத்துக்குடியில்இளையோர் தலைமைத்துவ பயிற்சி


தூத்துக்குடியில்இளையோர் தலைமைத்துவ பயிற்சி
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இளையோர் தலைமைத்துவ பயிற்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்ற பயிற்சி தொடக்க விழா தூத்துக்குடியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியில் இளையோர் தலைமைத்துவம், சமுதாய முன்னேற்றம், வாழ்க்கை கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி, தேசிய ஒருமைப்பாடு, இணையதளம், சுற்றுப்புற சுகாதாரம், தன்னம்பிக்கை, நேர மேலாண்மை, ஆளுமை வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானசந்திரன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் அகிலா, சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் நெல்லை பிரிவு உதவி இயக்குனர் ஜெரினா பப்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story