பல்வேறு இடங்களில் 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


பல்வேறு இடங்களில்  அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

‘அக்னிபத்’ திட்டத்தை எதிர்த்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் எல்.முத்துக்குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மு.கனகராஜ், வட்டார தலைவர்கள் முத்துசாமி, தேவராஜ், சுப்பிரமணி, வேலுமணி நகர தலைவர்கள் சிவக்குமார் (சத்தியமங்கலம்), சிக்கந்தர் பாட்சா (புஞ்சை புளியம்பட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் வெங்கிடாசலம், துரைசாமி, பவானிசாகர் ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குணசேகரன், வினோத் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

நம்பியூர்

இதேபோல் கோபி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி நம்பியூர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நம்பியூர் வட்டார தலைவர் (வடக்கு) சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

நம்பியூர் வட்டார தலைவர் (தெற்கு) ஜவகர்பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நகர தலைவர்கள் சதீஷ்குமார், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'அக்னிபத்' திட்டத்தின் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கி பேசியதுடன், அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தீபா, ரேவதி பழனிச்சாமி, தீபா தமிழ்ச்செல்வன், இசாக், மூர்த்தி கோதண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்தியூர்

அந்தியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் அந்தியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அந்தியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

பவானி

பவானியில் உள்ள அந்தியூர் பிரிவு சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.பூபதி தலைமை தாங்கினார். பவானி நகர தலைவர் கோபால், வட்டார பொறுப்பாளர்கள் சதாசிவம், நாகராஜ், விஜயகுமார், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முன்னாள் தலைவர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் பேசினார்.

இதில் நிர்வாகிகள் ராம்ராஜ், குறிச்சி சிவகுமார், அம்மாபேட்டை சேது வெங்கட்ராமன், பவானி நகர முன்னாள் தலைவர் கதிர்வேல், பவானி விஜய் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story