வேப்பூரில் வாகனங்கள் பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


வேப்பூரில்  வாகனங்கள் பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூரில் வாகனங்கள் பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடலூர்

வேப்பூர்,

வேப்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பாலத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு லாரி சர்வீஸ் சாலையின் தொடக்கத்தில் பழுதாகி நின்றது. பின்னர் மறுமார்க்கத்தின் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சாலையிலும், 2 லாரிகள் பழுதாகி நின்றன. இதனால் வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் சுமார் 5 மணி நேரம் அங்குலம், அங்குலமாக நகரக்கூடிய சூழல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதில் ஒரு ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் எனவும், வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story