வீரபாண்டியில் போலீஸ்காரர் என கூறி தொழிலாளியிடம் வழிப்பறி ஊர்க்காவல் படைவீரர் கைது


வீரபாண்டியில்  போலீஸ்காரர் என கூறி தொழிலாளியிடம் வழிப்பறி  ஊர்க்காவல் படைவீரர் கைது
x

வீரபாண்டி பகுதியில் போலீஸ்காரர் என கூறி தொழிலாளியிடம் வழிப்பறி செய்த ஊர்க்காவல் படைவீரரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

கொண்டலாம்பட்டி,

செல்போன், பணம் பறிப்பு

வீரபாண்டி பகுதியில் உள்ள தோப்பு காட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சேலம் மணியனூருக்கு வேலைக்கு சென்று விட்டு பின்னர் இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நெய்க்காரப்பட்டி பட்டர்பிளை பாலம் இறக்கம் பகுதியில் வந்தபோது மணிகண்டன் தனது நண்பரை பார்த்து வழியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தான் கொண்டலாம்பட்டி போலீஸ்காரர் என்றும், பொது இடத்தில் மது அருந்திவிட்டு பொழுதை போக்கி கொண்டு இருக்கிறீர்களா? என்று மிரட்டி, மணிகண்டனிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500-யை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

ஊர்க்காவல் படை வீரர் கைது

இதையடுத்து மறுநாள் மணிகண்டன் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுக்க சென்றார். அப்போது தான் தன்னிடம் பணம் செல்போனை பறித்தது போலீஸ்காரர் இல்லை என்றும் ஊர்க்காவல் படை வீரரான நெய்க்காரப்பட்டி மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (31) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக மணிகண்டன் கொடுத்த புகாரின் மீது கொண்டலாம்பட்டி குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து rவிசாரித்தார்.

இதில், போலீஸ்காரர் என்று கூறி தொழிலாளியிடம், கிருஷ்ணமூர்த்தி பணம், செல்போன் வழிப்பறி செய்தது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மணிகண்டனின் செல்போன் மீட்கப்பட்டது.

வீரபாண்டியில் போலீஸ்காரர் என கூறி தொழிலாளியிடம் ஊர்க்காவல் படைவீரர் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story