வீரபாண்டியில்கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 13¾ பவுன் நகை திருட்டு


வீரபாண்டியில்கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 13¾ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டியில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 13¾ பவுன் நகை திருடுபோனது.

தேனி

தேனி அருகே வீரபாண்டி அம்மன் நகரை சேர்ந்தவர் குணசீலன் (வயது 42). கட்டிட காண்டிராக்டர். கடந்த 8-ந் தேதி இவர், குடும்பத்துடன் மதுரைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை குணசீலனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மீனாட்சி சுந்தரம் என்பவர் பாா்த்தார். உடனே அவர் குணசீலனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து குணசீலன் மதுரையில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

பின்னர் உள்ளே சென்றபோது வீட்டின் முன், பின்பக்க கதவுகளில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோ கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து அவர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவுகளில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 13¾ பவுன் தங்க நகைகள் மற்றும் 1 கிேலா மதிப்புள்ள 2 வெள்ளி கட்டிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story