வெங்கடாசலபுரம் ஊராட்சியில் அரசு நிதியில் முறைகேடு நடந்ததாக மக்கள் புகார்
வெங்கடாசலபுரம் ஊராட்சியில் அரசு நிதியில் முறைகேடு நடந்ததாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, வெங்கடாசலபுரம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் சிலர் வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், "கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று எங்கள் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் பற்றி சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் மக்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.
ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அரசு நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story