விழுப்புரத்தில் உலக வெறிநோய் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் உலக வெறிநோய் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடைபெற்றது. இப்பேரணிக்கு துரை.ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். பேரணியை கலெக்டர் மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சாந்தி, தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் காஞ்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story