வைப்பாறு வடிநில கோட்டத்தில்நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்


வைப்பாறு வடிநில கோட்டத்தில்நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைப்பாறு வடிநில கோட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

தூத்துக்குடி

வைப்பாறு வடிநில கோட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேர்தல்

தூத்துக்குடி மாவட்டம், வைப்பாறு வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் வட்டம் வேம்பார், வைப்பாறு மற்றும் செங்கோட்டையாறு உபவடிநிலங்களில் அமைந்துள்ள 6 கண்மாய்களின் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான மறு இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 23.04.2023 அன்று நடைபெறவுள்ளது.

வேட்புமனு

நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து 10.04.2023 முதல் 12.04.2023 வரை காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பு மனுக்கள் பெறப்படும். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் 13.04.2023 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூர்ந்தாய்வு செய்து ஏற்கத்தக்க வேட்பு மனுக்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.

போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை 13.04.2023 பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் 13.04.2023 மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பார்.

வாக்குப்பதிவு

நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு 23.04.2023 அன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 23.04.2023 அன்று மாலை 4 மணி முதல் எண்ணத் தொடங்கி முடிவுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் வட்டம் வேம்பார், வைப்பாறு மற்றும் செங்கோட்டையாறு உபவடிநிலங்களில் அமைந்துள்ள 6 கண்மாய்களின் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் காலியாக உள்ள தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கோவில்பட்டி உதவி கலெக்டரால் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story