நலத்திட்டமாக வழங்கும் வாகனங்களில்பிரதமர் படம் இடம் பெற வேண்டும்:பா.ஜ.க.வினர் கோரிக்கை மனு
நலத்திட்டமாக வழங்கும் வாகனங்களில் பிரதமர் மோடி படம் இடம் பெற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பா.ஜ.க தேனி நகர தலைவர் மதிவாணன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் 'தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக பிரதமரின் தீனதயாள உபத்தியாய திட்டத்தின் கீழ் 111 வாகனங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் 60 சதவீதம் மத்திய அரசு பங்கும், 40 சதவீதம் மாநில அரசு பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு வீரபாண்டியில் நடந்த அரசு விழாவில் 9 வாகனங்கள் கொடுக்கப்பட்டது. பயனாளிகள் பயன்படுத்தும் இந்த வாகனத்தில் பிரதமரின் புகைப்படம் இடம் பெறவில்லை. இந்த வாகனத்தில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
Next Story