போதிய வசதிகள் இல்லாத பயணிகள் நிழலகம்
போதிய வசதிகள் இல்லாத பயணிகள் நிழலகம்
கூத்தாநல்லூர்
லெட்சுமாங்குடியில் போதிய வசதிகள் இல்லாத பயணிகள் நிழலகத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் நிழலகம்
கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் குறுகலான பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழலகத்தை கூத்தாநல்லூர், பண்டுதக்குடி, நாகங்குடி, பழையனூர், புனவாசல், வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், சேந்தங்குடி, மாவட்டக்குடி, செருவாமணி, எட்டுக்குடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
தற்போது இந்த பயணிகள் நிழலகத்தில் சிறு-சிறு விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மேலும் மழை காலங்களில் பயணிகள் நிழலகம் உள்பகுதியில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பயணிகள் நிழலகத்தில் போதுமான வசதிகள் இல்லை. இதனால் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாமல் சாலையிலேயே பல மணி நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய வசதிகள் இல்லாத பயணிகள் நிழலகத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் இருக்கைகள் உள்ளிட்ட போதிய வசதிகள் அமைத்து புதிய பயணிகள் நிழலகத்தை கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.